ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகக்கூடிய அற்புதமான வாரம். இனிப்பான செய்திகள் வரும். பழிச் சொல்லிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்சனைகள் தீரும். பணியாட்களால் தொல்லை மாறும். கல்வியில் மந்த நிலை மாறும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். கலைத் தொழில் திருப்பம் வரும்.அலுவலகங்களில் பாராட்டு குவியும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவரின் தொல்லைக் குறையும். பிரித்து குடும்பம் ஒன்று சேரும்.
வழிபடவேண்டியதெய்வம்: பிரளய தேவி
அதிர்ஷ்ட எண்: 1, 9, 5, 2; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, U;
ரிஷபம் :
ஆதாயமும், ஆதாரமும், அதிகாரமும் சேரக்கூடிய அற்புதமான வாரம். சுய விடு வாங்க முயற்சி செய்யலாம். மங்களமான நாள். அரசு வாய்ப்பு தடைப்படும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். கலைத்துறையில் முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். திருமண முயற்சி வெற்றி தரும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். தோற்றப் பொலிவு கூடும். நல்லவர் நட்பு கிட்டும். எதிரிகள் பலம் குறையும்.
வழிபடவேண்டியதெய்வம்: வேலவப்பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 9, 4, 3, 1; அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – K, Z;
மிதுனம் :
ஆலய தரிசனத்தால் ஆத்மபலம் பெறக்கூடிய அற்புதமான வாரம். காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். பழைய கடன் வசூலாகும். வாகனச் செலவு ஏற்படும். வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். திறமையில் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத் தொழிலில் நிலை உயரும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். உதவிகள் கிடைக்கும் நாள். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: நவ தேவதை
அதிர்ஷ்ட எண் – 6, 9, 2, 3; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – P, U.
கடகம் :
மேலான ஆசியும், மேதைகளின் நட்பும் கிடைக்கக்கூடிய வாரம். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. பயணம் வெற்றி தரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். கணினி துறையில் ஊதிய உயர்வு கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள். ஆரோக்கியம் சீராகும். சூழ்ச்சிகள் இருந்து விடுபடுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்.
வழிபடவேண்டியதெய்வம்: பஞ்சபூதக் கடவுள்
அதிர்ஷ்ட எண் – 6, 0, 2, 3 அதிர்ஷ்ட நிறம் – வெண்பட்டு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, N;
சிம்மம் :
இனிய கனாக்காணவும், இன்ப உலா செல்லவும் இனிமையான வாரம். காரியம் கைகூடும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். வில்லங்கம் விலகும். போட்டிகள் உருவாகி மறையும். வியாபாரத்தில் கவனம் தேவை. வீடு வாங்கும் யோகம் உணடு. வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வழக்குகள் சாதகமாகும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை.
வழிபடவேண்டிய தெய்வம்: சுக்கிர பகவான்
அதிர்ஷ்ட எண் – 4, 6, 1, 5; அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I, P;
கன்னி :
வீணான அலைச்சலும், வேதனைக் காலங்களும் விலகக்கூடிய அற்புதமான வாரம். ஆடம்பர செலவு அதிகரிக்கும். மாற்று இன நட்பு பெருகும். வயிற்று உபாதை வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும்.பேச்சில் கணிவு தேவை. களவுப் போன பொருள்திரும்ப கிடைக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்: தேவி காளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண் – 3, 2, 7, 1; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, V;
துலாம் :
வாடும் நிலை விலகி வீடு, நிலமும் வாங்கக் கூடிய நல்ல வாரம். சிக்கனத்தை கையாள வேண்டும். ஞாபகத் திறன் அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கைகூடும். நீண்ட நாளைய நோய் விலகும். பணவரவு திருப்தி தரும். மன மகிழ்ச்சி அதிகர. இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஏழுமலை ஆண்டவர்
அதிர்ஷ்ட எண் – 3, 4, 6, 8. அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள். அதிர்ஷ்ட எழுத்துக்கள் – T, P
விருச்சிகம் :
அனைத்து விதத்திலும் ஆதாயம் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரம். விரக்திகள் மறையும். வாகனத்தில் செலவு ஏற்படும். கலைத்துறையில் கௌரவம் கூடும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். முன்னோர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். உடல்நலம் சீராகும். உற்சாகம் மேலோங்கும். உறவுகளால் நன்மை ஏற்படும். பயணம் வெற்றிதரும். நீண்டநாள் கனவு நிறைவேறும். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. திண்டாட்டங்கள் மறையும். வேதனைகள் சாதனையாகும். சொந்த முயற்சிகள் பலன் கொடுக்கும். உத்தியோக உயர்வு கிட்டும்..
வழிபடவேண்டிய தெய்வம்: திருமுருகக் கடவுள்
அதிர்ஷ்ட எண் – 3, 8, 4, 9 அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Z, H.
தனுசு :
மனைவி மக்களால் மகிழ்ச்சி ததும்பக்கூடிய மகத்தான வாரம். இல்லம் தேடி வாய்ப்பு வரும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உறவுகளால் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அயல்நாட்டுப் பயணம் உண்டு. பொருளாதாரம் மேம்படும். துணிவோடு செயல்படுவீர்கள்.
வழிபடவேண்டியதெய்வம்: சயன கணபதி
அதிர்ஷ்ட எண் – 5, 9, 8, 2 அதிர்ஷ்ட நிறம் – கிளிப்பச்சை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – U. K.
மகரம் :
தொழில் வகையில் மேன்மையும் தொகை தொகையாய் லாபமும் சேரக்கூடிய வாரம். வீடு, மனை யோகம் உண்டு. விவசாயம் லாபம் தரும். வியாபாரம் மந்தமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகமாகும். சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். சேமிப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருள் சேரும். பண வரவு மேலோங்கும். பாக்கிகள்வ சூலாகும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பு கடுமையாக இருக்கும். மனித நேயம் மிகுதியாகும். நீண்ட தூரப் பயணம் லாபம் தரும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கூடும். குடும்பத்தில் குழப்பம் தீரும். சுபச் செய்தி தேடி வரும். ஆபரணப் பொருள் களவு போகும்.
வழிபடவேண்டியதெய்வம்: மங்கள மாரியம்மன்
அதிர்ஷ்ட எண் – 7, 6, 4, 0 அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – A, N.
கும்பம் :
வீரியமான செயல்பாடுகளால் விசேஷமான பலன்கள் கிடைக்கக்கூடிய வாரம். கன்னிப் பெண்களின் உற்சாகம் அதிகரிக்கும். உங்களால் மற்றவர்களுக்கு அதிகம் நன்மைகள் கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர் வருகை உண்டு. பெற்றோரின் ஆசி கிடைக்கும். கர்ம வினைகள் அகலும். பணம் புரளும். எதிலும் வெற்றி கிட்டும். விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. நிதானத்தோடு செயல்பட வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். உடல் பொலிவு கூடும்.
வழிபடவேண்டிய தெய்வம்: சுவாமி தர்மசாஸ்த்தா
அதிர்ஷ்ட எண்: 2, 1, 0, 0; அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, R;
மீனம் :
நாடிய பொருளும், தேடி வாய்ப்பும் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரம். கடன் உபத்திரவம் குறையும். குடும்ப கௌரவம் ஓங்கும். மற்றவர் தொல்லை நீங்கும். வெற்றி நிலை தொடரும். நடவடிக்கையில் மாற்றம் வரும். எதிர்பாராத லாபம் சேரும். எண்ணிய காரியம் கூடும். இல்லத்தில் நல்லவை நடக்கும். தோற்றப் பொலிவு கூடும். வேற்று மதத்தினரால் உதவி சேரும். பழையக் கடன் தீரும். புதிய வாய்ப்பு கூடும். தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். மாற்று எண்ணம் உதயமாகும். பெண்களின் திறமை பெருமை தரும். கற்பனை ஆற்றல் பெருகும்.
வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும்.
வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சிஅம்மன்
அதிர்ஷ்ட எண். 5, 3, 0, 1; அதிர்ஷ்ட நிறம் – அரக்கு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Q, W.