அமரர். சதாசிவம் சிவலிங்கம்
(வேலணை வடக்கு சோழாவத்தை)
தோற்றம்:06-08-1942
மறைவு: 21-04-1999
திதி:19-04-2021
வானத்து எழில் கொழியும் மாதமிரு மழை பொழியா மனதொத்த மக்கள் வாழ்ந்த மகிழம்பூ வாச நிறை கானத்து பறவையினம் படமெடுக்கும் பரம்பெலாம் பறந்தோடி பரந்தோடி வாழ்ந்திரு நல்ல நல மருந்தாய் கற்றாளை மர வளம் கண்ட கவிநங்கை (வளவளப்பான உடல்வாகு ) மகளீர் கலகலத்த வேலது மண்ணின் சோழர் கடந்து சென்ற சோழாவத்தை மண்ணது மைந்தன் சதாசிவம் மணம் கண்டு அம்மையாம் மாணிக்கம் மகிழ்ந்தே சிவனவன் அருள் கண்டு உதித்தாரே சிவலிங்கம் தானே… கண்ணன் நிறத்தான் கருவிழி மயிலோன்… மற்றோர் மனம்
காக்கும் மானிடத்து மரக்த மனத்தோன் ….. மண்ணதின் மருக்கொழுந்து மகாலட்சுமியவள் ராசலட்சுமியை பூரவ புண்ணிய பலனாய் மணமது கண்டே…. கயிலையவன் மைந்தன் கடம்பனருளால் .. ஆறுடன் மூன்றாக ஆணும் பெண்ணுமாய் மகவுகளாய் கண்ணின் மணிகளே கண்டு மகிழ்வுடன் கடல் கடந்தே கனடா வந்தாரே வனப்புடனே.
வந்தவர் வாழ்வில் சிறக்கையிலே மனதும் மகிழா மாயமொன்று கடந்ததே. மக்கள் மனமகிழ மாயனாய் உழைத்த எம் குடும்ப கோலமகனை எங்கள் குடும்ப தலைவனாம் சிவ பக்தன் சிவலிங்கம் அவரை… நாடு கடந்து நான்காண்டு முடியுமுன்னே அந்தகக் காலன் கவர்ந்தானே மாயமாய் மறைந்தாரே எமை பிரிந்தாரே.
தொண்ணூற்றி ஒன்பதிலே.. மறக்குமோ… இந்த மாமனித நேய மனிதரை… ஆண்டவா எம்முறவு எமை பிரிந்தே வருடமாய் இருபத்தி இரண்டாச்சே… இனி என் செய்கோம்….எமக்கும் இதுவழி என்றாலும் இழப்பு எமக்கல்லவா.. எம் செல்வர் சிவலிங்கம் அவர்களின் இருபத்தியிரண்டாம் நினைவது காண்பது மாதமாய் சித்திரை இருபத்தி ஒன்றாயினும் … மன்னன் மறைவுற்ற நட்சத்திர காலம் கூடிவரும் சித்திரை பத்தொன்பதில் .. நினைவது சடங்கே நிறைவுற செய்திடுவோம்…… மன நிம்மதி பெறவே…. மண்ணது மக்களும் அவரது நினைவுறவே.. வேலணையில்.
நம்மது. ஊரது மண்ணில்…. சைவபிரகாச வித்தியாசாலை தனிலே பலர் கூடி உண்டி விரும்பியே உணவது உண்டிட வழி செய்கின்றோமே …. இந்த வழி அவரது நினைவு நினைத்திட…. செய்தி கேடடோரும்.. இன்ப நண்பர்களும் உற்ற உறவுகளும்.. ஏற்பீர்களே எம் உறவே…..
தகவல்
மனைவி – இராசலட்சுமி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.