இலங்கையில் தற்போது ஜனாதிபதி கோட்டாடபாயவிற்கு ஏற்பட்டுள் நெருக்கடிகள் காரணமாக சில அரசியல்வாதிகளை அழைத்த கோட்டாபாய அவர்களை தவறான முறையில் எச்சரித்துள்ளதாகவும் இதே போன்று தன்னை திட்ட ஜனாதிபதிக்கு முடியாது என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னைக் கொலை செய்ய முடியும், ஆனால் எனது வாயை அடைக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் ஊடக தனியான வேறு நாடு உருவாகும்.
உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நான் இதனைச் செய்யவில்லை. வாகனங்கள் மற்றும் கட்டங்களை வழங்கி என்னை விலைக்கு வாங்க முடியாது.
என்னை சஜித் பிரேமதாச வழிநடத்துவதாகக் கூறிய கருத்து, அமைச்சர் மகிந்தானந்த அளுத்மகேவின் உண்மைக்குப் புறம்பான கதை.
மற்றைய பிக்குமார் தற்போது பணம், வாகனங்களுக்காக தமது வாய்களை மூடிக்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தை எதிர்த்தால், எமக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதால், அவர்கள் அமைதியாக இருக்கின்றனர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிக்க, இலங்கையின் தென் பகுதியில் உள்ள மற்றுமொரு பௌத்த பீடத்தின் தவைரும் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபாயவை கண்டித்துள்ளார்.
இலங்கைக்குள் சீன தேசமொன்றை உருவாக்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என மேற்படி பௌத்த பீடத்தின் தலைவர் ஒமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் இன்னொரு நாட்டின் பகுதியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சீனாவின் காலனியாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக அனைத்து தரப்பினரும் அணிதிரளவேண்டும் என ஓமல்பேசோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டை விடுதலை செய்யவதற்காக 30 வருட யுத்தத்தை எதிர்கொண்டோம் என தெரிவித்துள்ள அவர் தற்போது ஆயுத வழியை பயன்படுத்தாமல் அதேபோன்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை சீனாவிடம் தனது1115 ஏக்கர் நிலத்தை இழந்துவிடும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்டமூலம் உருவாககூடிய விளைவுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிற்கு தெரியுமா நாட்டை சீனாவிடம் கையளிக்கும் திட்டத்திற்குஅவர்கள் தயாராஎனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறாக பார்க்கும் இலங்கையில் செல்வாக்கு அதிகமாக உள்ள பௌத்த பீடங்களின் தலைவர்களாக விளங்கும் சில பௌத்த தேரோக்களுக்கு விலை உயர்ந்து வாகனங்களையும் பணத்தையும் அரசாங்கமும் ஜனாதிபதி கோட்டாபாயவும் வழங்கியுள்ளமை தற்போது கசிந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.