தென்னாசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளின் அலை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வரும் அனைத்து விமானங்களையும் 30 நாட்களுக்கு தடை செய்வதாக கனடா மத்திய போக்குவரத்து அமைச்சு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கனடாவின் மத்திய போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா வியாழக்கிழமை இரவு தொடக்கம் இந்த தடை அமுல் செய்யப்படும் என்று கூறினார், கடந்த 24 மணி நேரத்தில் 314,000 க்கும் அதிகமான புதிய தொற்றுநொயாளர்கள் அங்கு இருப்பதாக இந்தியா உலகளவில் பதிவு செய்துள்ளது. எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சரக்கு விமானங்கள் நிறுத்தப்பட மாட்டா என்றும் அமைச்சர் கூறினார்
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமானம் மூலம் வந்த பின்னர் கொரோனா வைரஸக்கு சோதனை செய்யப்பட்ட பாதி பேர் சாதகமான முடிவுகளைப் பெற்றார்கள் என கனடாவின் மத்திய சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரும் விமானப் போக்குவரத்து கனடாவிற்கு வரும் விமானங்களின் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
பாக்கிஸ்தானில் இருந்து விமானங்களில் பயணிப்பவர்களிடையே அதிக எண்ணிக்கையிலானவர்களும் பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் சாதகமான முடிவுகளைப் பெற்றார்கள் என்றும் அவர் கூறினார்.
“எங்கள் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் முடிவுகளை எடுத்த போது அந்த பிராந்தியத்திலிருந்து விமானப் பயணத்தை இடைநிறுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் கனடாவிற்கு பிரேசிலில் இருந்து நேரடியாக விமானங்கள் எதுவும் தற்போது வருவது இல்லை, அங்கும் கோரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்து இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன.” என்றும் அமைச்சர் ஹஜ்து கூறினார். இது இவ்வாறிருக்க, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிலிரு;நது மட்டும் சுமார் ஆயிரம் மாணவர்கள் இங்குள்ள சமூகக் கல்லூரிகளில் அனுமதி பெற்று விமானங்கள் மூலம் கனடா வந்தார்கள் என்றும் விமான நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.