(மன்னார் நிருபர்)
(23-04-2021)
மன்னார் மாவட்டம் மற்றும் அதன் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் ‘மாவட்ட கீதம்’ வடிவமைப்பதற்கு மாவட்ட கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டம் மற்றும் அதன் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் ‘மாவட்ட கீதம்’ வடிவமைப்பதற்கு மாவட்ட கலைஞர்கள் மற்றும்கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது.
-விசேடமாக மாவட்டத்திற்கே உரியதான வரலாற்றுத் தடையங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை எடுத்து இயம்பும் வகையிலும் மூன்று தொடக்கம் நான்கு நிமிடங்களுக்குள் இசைக்கக்கூடியதாகவும் மேற்படி கீதம் அமைதல் வேண்டும்.
-எழுத்துப் பிரதியாகவோ அன்றி இசையமைத்து இறுவட்டு வடிவிலோ கீதத்தினை சமர்ப்பிக்க முடியும்.
-ஆக்கங்கள் அனைத்தும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு (31-05-2021) முன்னர் மாவட்டச் செயலாளர்,மாவட்டச் செயலகம்,மன்னார் என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் நேரடியாக அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.