மன்னார் நிருபர்
26.04.2021
கிராமிய ரீதியில் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் வகையிலும்இ நஞ்சற்ற விதைகள் ஊடாக இயற்கை முறையிலான விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் முகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட பெண்கள் குழுவினர் மற்றும் தோட்ட செய்கை முயற்சியாளர்களுக்கான விதைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை(26) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பரசன் குளம் கிராம சேவகர் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது.
கிராம ரீதியில் பெண்கள் குழுவாக சுய தொழில் முயற்சி மற்றும் தோட்ட செய்கையில் ஈடு பட்டுவரும் 50 குடும்பங்களுக்கு மேற்படி விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாரம்பரியமாக மரபனு மாற்றப்படதா இயற்கை முறையான வெண்டி, பயிற்றை, பாகல், தக்காளி, புடோல்,மிளகாய்,கீரை உற்பட பத்து வகையான விதைகள் அடங்கிய பொதிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படமை குறிப்பிடதக்கது