இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐஸ், ஹெரோயின், மற்றும் கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி வந்து விநியோகிப்பது மற்;றும் விற்பனை செய்வது ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ரூ. 7 கோடி பெறுமதியான 7 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
24, 26, 34 மற்றும் 38 வயதுடையவர்களான குருநகரைச் சேர்ந்த இருவரும் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவரும் கோப்பாயைச் சேர்ந்த ஒருவருமாக மேற்படி நான்கு பேர் கைது செய்யப்படனர். 12 தடவைக்கு மேல் இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ் குடாநாட்டிற்கு போதைப்பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு கடத்தி வந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு தரை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து கூலர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.