30-04-2021 கதிரோட்டம்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச. கடந்த சில சகாப்த்தங்களாக இலங்கையில் ஆட்சி பீடத்தில் அட்டகாசமாக அமர்ந்திருந்து நாட்டில் செல்வந்தக் குடும்பங்களின் வரிசையில் சகோதரர்கள் அனைவருமே வந்து விடவேண்டும் என்ற வேகமான திட்டமிடலுடனும் நிகழ்ச்சி நிரலுடனும் இயங்கும் சகோதரக் குழுமத்தின் ஒரு பிரதிநிதி. அதை ஒரு பெந்தேசிய வர்த்தக நிறுவனம் என்றும் கூறுகிறார்களே!
தேசத்தின் ஆட்சி அதிகாரத்தில் உறுதியாக அமர்ந்து கொண்டு, அதிகார பலம், பண பலம், ஆகியவற்றோடு, இன்னும், அநியாயகளுக்கு துணைபோகும் சகாக்களையும் சர்வதேச நாடுகளையும் தங்கள் கைகளுக்குள் ‘போட்டுக் கொண்டு” சாமர்த்தியமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சகாப்த்தம் ஒன்றில் அவர்கள்.
அவ்வாறு நாட்டை சூறையாட வந்தவர்களின் அணி ஒரு புறமும், வாழ்வோமா அல்லது சாவோமான என்று அல்லலுறும் நாட்டின் மூவின மக்களும், பழி வாங்கப்பட்டுக் கொண்டே நாட்களைக் கழிக்கும் எண்ணிக்கை அற்ற மாற்றுக் கட்சியினர், நேர்மையான ஊடகவியலாளர்கள் ஆகியோர் மற்றொரு புறமுமாக அந்த மாங்கனித் தீவின் இருப்பு நாளொறு கேடு என்பது போல் கழிகின்றது.
இயற்கையின் படைப்பாக ஒரு மாங்கனியைப் போன்ற அந்த தீவின் வய்றிறுப் பகுதியில் தொங்கிக் கொள்வதற்காக ஒரு பையைப் போன்ற ‘துறைமுக நகரத்தை’ செயற்கையாய் கட்டியெழுப்பி அதனை அனுபவிக்கும் பாக்கியத்தை கடல் தாண்டி வந்தவர்களுக்கு கையளித்துவிட, பெற்றவற்றை தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக அடமானம் வைத்த அயோக்கியத்தை அடுக்கடுக்காய் விமர்சனம் செய்யும் ஆட்சி மொழிக்காரர்களின் வசையையும் வெற்றிகொள்வதாக காட்டி தொடர்ந்து நாசம் செய்யும் ஒரு ஆட்சியின் வாரிசுக்கள் அந்தத் அடங்குவதாகவே இல்லை.
இவ்வாறான நிலையில் தான் அந்த அதிகார பீடத்திலிருந்து அந்த குரல் கூச்சலிடுகின்றது. “இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன்-“ என்று கூறிய
ஆந்தக் கூச்சல் மீண்டும் தொடர்கின்றது”ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமகனை உருவாக்க நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும்.
அடுத்த பத்தாண்டுகளில் இலங்கையில் விவசாயத்திற்கு முழுமையாக சேதன உரங்களைப் பயன்படுத்த அந்த உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும்.” தேசத்தில் புறையோடிப் போன பிரச்சனைகள் எத்தனையோ. இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்புகளாக உழைத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நாள் ஊதியத்தை வழங்குவதை மறந்தது போல் இருந்தபடி சீனாவும் இந்தியாவும் தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதுபோல காட்சிப்படுத்தியபடி அவர்களின் தந்திரமான அரசியல் தற்காலிக சந்தோசங்களை தந்தபடி வாய்கள் சிரித்து நிற்க நெஞ்சில் வஞ்சகம் விஞ்சிக் கொள்ள சூதுகளை விவாதிப்பதற்கு நேரம் இல்லாமல் தவிக்கும் நிலை அங்கு.
இவ்வாறான நிலையில் உலக முதலாளித்துவத்தின் கைகளில் உள்ள இரசாயன உரங்களின் உற்பத்தி, அவர்களுக்கு தரகர்களாக நாட்டில் இயங்கும் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு இவர்களை நிராகரித்து தேசத்தின் தலைவரால் அனைத்தையும் நிமிர்ந்து நின்று நிராகரிக்கும் பக்குவம் பெற்றவரா இவர் என்ற கேள்விதான் இங்கே இழுகின்றது. இந்த அறிவிப்பைக் கேட்டு இதுவரைக்கும் எத்தனை |பேரங்கள் அங்கு இடம் பெற்றிருக்குமோ.
துறைமுக நகரத்தை ஒரு நாட்டுக்கு தாரை வார்த்தது போன்று இரசாயன உரங்களின் பெயரால் எந்த நாட்டுக்கு இந்த அழகிய தேசத்தின் வளங்கள் வாரிக்கொடுக்கப்படுமோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.