ஒன்ராறியோ அரசாங்கம் உழைக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். அத்துடன் ஒன்ராறியோ அரசானது இத்தொற்றுநோய் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பரிந்துபேசி வருகிறது.
அதனாலேயே ஒன்ராறியோ அரசாங்கம் ஒன்ராறியோ கோவிட்-19 தொழிலாளர் வருமான பாதுகாப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக வேலையை இழப்பவர்களுக்கு 3 சுகயீன நாட்கள் விடுமுறையை வழங்கும் ஒரேயொரு மாநிலமாக ஒன்ராறியோ விளங்கும்.
மேலும், கனடாவிலேயே போதிய அளவிலான தொற்றுநோய் விடுப்பு காலத்துக்கான ஊதியத்தினை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நோயிலிருந்து மீளும் காலத்துக்கான நிதியில் (CRSB) ஏற்படும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு எமது அரசாங்கத்தின் இந்நடவடிக்கை வழிசமைக்கிறது.
இக்காலகட்டத்தில் ஒன்ராறியோவில் வசிப்போருக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு வழங்கும் நிதியுடன் சேர்த்து இரு மடங்கு நிதியினை சுகவீன ஊதிய நாட்களுக்கு நாம் வழங்க முன்வந்துள்ளோம். அதாவது, ஒருவர் மத்திய அரசினால் வழங்கப்படும் $500 டொலர்களுடன் இரு மடங்கு நிதியாக வாரத்துக்கு மொத்தம் $1000 டொலர்களையும், தேவைப்படின் 4 வாரங்களுக்கு $4000 டொலர்களையும் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு எமது இத்திட்டத்தினை ஏற்கும் பொருட்டு, இது உடன் மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படும்.மத்திய அரசும் அவ்வாறு செய்வதற்கான விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன் CRSB திட்டம் புதுப்பிக்கப்பட்டவுடன், தகுதியுடையவர்களுக்கு இதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
கோவிட்-19 நோய்ப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது மாநில அரசாங்கம் செய்துவரும் அதேவேளையில், மக்களுக்கு போதியளவில் தடுப்பூசிகளை வழங்குதல், நாட்டின் எல்லைக் கட்டுப்பாடுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்து புதிய தொற்றுக்கிருமிகள் உள்நுழையாது தடுத்தல் போன்றவை மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.
மேலும் விவரங்களுக்கு www.ontario.ca/COVIDworkerbenefit எனும் இணைய தளத்தைப் பார்வையிடவும், அல்லது 1-888-999-2248 எனும் எண்ணுக்கு அழைக்கவும்.
விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்காபரோ – றூஜ் பார்க்
April 29th, 2021
In response to an expected increase in vaccine supply from the federal government, the Ontario government is preparing to ramp up its rollout of COVID-19 vaccines to further support at-risk communities. This includes a targeted commitment to allocate 50 per cent of upcoming vaccine shipments to hot spot communities as identified by postal code, to help decrease COVID-19 transmission and hospitalizations.
Residents 18+ living in hotspot communities will now be able to book their COVID-19 vaccine starting on May 3rd. The Ontario government has increased the supply of vaccines to hotspot regions by 50%. Over one million doses will be available to hotspot communities.
Starting May 3rd, you may book your vaccine at ontario.ca/bookvaccine or by calling the Provincial Vaccine Line at 1-888-999-6488.
As the next step in Ontario’s vaccine rollout, effective April 30, at 8:00 a.m., individuals aged 55 and over are eligible to book a vaccine appointment. This same day, a pilot will launch through select pharmacy locations in hot spot communities to administer the Pfizer vaccine to individuals aged 55 and over.
Eight stores in Peel and eight in Toronto will participate in this pilot, with each location receiving approximately 150 doses per week to help Ontario continue to grow provincewide capacity to vaccinate as many individuals as quickly as possible.
This is expected to expand to additional public health units later in May following evaluation of the program and as supply allows. Pharmacies will continue to use their own booking system for appointments.