இன்று தொடக்கம் ரொறன்ரோவின் சன்னிபுரூக் சுகாதார நிலையத்தின்; தீவிர சிகிச்சை பிரிவில் கனேடிய இராணுவம் பணியாற்றுகின்றது
ரொறன்ரோவில் உள்ள சன்னிபுரூக் சுகாதார நியைம் மற்றும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஊழியர்களுக்கு உதவிட சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய கனேடிய இராணுவ பணிக்குழு இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் பணியாற்றவுள்ளது இது ஒன்ராறியோ மருத்துவமனைகளுக்கு COVID-19 உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இராணுவம் பயன்படுத்தப்படுவதன் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது
கூட்டு பணிக்குழு மையத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் சோனியா டும ழர சல்-கானாக், சன்னிபிரூக்கிற்கு “அவசர ஊழியர்களின் தேவைகள்” இருப்பதாகவும் அது காரணமாகவே இந்த இராணுவக் குழு வந்துள்ளதாவும் கூறினார்.
ஒன்ராறியோ மாகாண மருத்துவமனைகளுக்கு இராணுவத்தை அனுப்புவதற்கு தலைமை தாங்கும் பணியில் ஈடுபட்ட ஸ்டீபன் மாஸன், சன்னிபுரூக்கிற்கு முன்னுரிமை அளிப்பது என்பது மாகாண அரசின் முடிவாகும் என்றும் கூறினார். இதேவேளை, ஹாமில்டன் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் தேவைகளையும் அவற்றிக்கு என்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்பவை தொடர்பாகவும் தீர்மானிக்க கலந்துரையாடல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன என்றும் தெரிவித்தார்.
“பணிக்குழுவின் உறுப்பினர்கள் ஒன்றாரியோ மாகாணத்தின் அதிகாரிகளோடு தினசரி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர், நாங்கள் மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் முன்வரிசை ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் ஆகியோருடன் பணியாற்றி சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று வியாழக்கிழமை ஒரு நேர்காணலில் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இதைவேளை “அவர்களின் தேவை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கா, நாங்கள் ஹாமில்டன் பிரதான வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.