ஒன்றாரியோ மாகாண சுகாதார அமைச்சர் கூறுகின்றார்
ஒன்ராறியோ, மே மாத இறுதிக்குள் கோவிட்-19 க்கு எதிரான முதல் தடவை ஏற்றப்படும் ஊசிகள் 65 சதவீத வளர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பூசி ஏற்றப்படும் மருந்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலமும், ரொரன்ரோவில் உள்ள தொற்று பாதிப்பு அதிகம் உள்ள (ஹொட் ஸ்பொட்) பகுதிகளின் நடமாடும் மொபைல் கிளினிக்குகளை அனுப்புவதன் மூலமும். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஐந்து மில்லியன் ஒன்றாரியோ மக்கள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் தடுப்பூசிகளைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன இந்த திட்டத்தின்படி, ஒரு மாதத்திற்குள் வாராந்தம் 940,000; ஃபைசர் தடுப்பூசிகள் எமது மாகாணத்தில் நிறைந்திருக்கும் என்று என்று மாகாணத்தின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்தார்.
அன்று மாகாண அரசின் குயின்ஸ் பார்க் வளாகத்திலிருந்து ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவல்களின்போது அ வர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “தடுப்பூசி திட்டத்தில் வார இறுதிக்குள் மேலும் 1,000 மருந்தகங்கள் சேர்க்கப்படுகின்றன, மொத்த மருந்தகங்கள் சுமார் 2,500 ஆகக் கொண்டுவரப்படுகின்றன, இருப்பினும் அவைகளுக்கு எப்போது தடுப்பூசிகள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மாடர்னா தடுப்பூசிகளின் ஒரு பகுதி, யோர்க் மற்றும் டுறஹாம் பிராந்தியங்கள், ஹாமில்டன், ஒட்டாவா மற்றும் விண்ட்சர்-எஜெக்ஸ் ஆகிய 60 அதிக தொற்றுக்கள் கண்டறியப்பட்ட மருந்தகங்களுக்கு செல்கின்றன.
ரொரொன்ரோ, பீல் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களில் உள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக வெள்ளிக்கிழமை நடமாடும் ஐந்து மொபைல் கிளினிக்குகள் இதில் அடங்கும், அங்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாமல் பணியாற்றுபவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டும். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.