மலர்வு: 25–12–1957
உதிர்வு: 05–05–1985
திதி : 26-04-2021
இன்றிலிருந்து முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு சித்திரா பௌர்னமி நாளில் உன் இதயத்தை துளைத்துச் சென்ற அந்த சிங்களச் சிப்பாயின் சன்னங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் உயிர்களை குடித்துக் கொண்டே இருக்கின்றன ஆமாம் சகோதரனே, வற்றாத நிலாவரை ஊற்றைப் போல நம் அயல் நாட்டு அரசுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி இறைப்பதால் சிங்களச் சிப்பாய்களின் துப்பாக்கிகள் இன்னும் சீறிக்கொண்டு இருக்கின்றன இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் உன் சிதைத்த நெஞ்சிலிருந்து சிந்திய குருதியின் கோரமும் முனகியபடி அடங்கிய உன் குரலும் இன்னும் எங்களுக்கு கேட்டும் ஒலியாக சேர்ந்தே வருகின்றன…
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்