இலங்கையின் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 22 பேர் நேறறு ஞாயிற்றுக்கிழமை 9ம் கிழமை உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது . அங்கு, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளமை நேற்றே என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் ஆறு பெண்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கொழும்பு8, மொரட்டுவ, ராகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்
இது இவ்வாறிருக்க, இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனா வைரசினால் உயிரிழப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன்14 ம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் என தெரிவித்துள்ள வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி அமைப்பின் முடிவை மேற்கோள் காட்டி இலங்கையில் மருத்துவச் சங்கங்கள் இலங்கை அரசை எச்சரித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் அறவித்துள்ளார்.