(மன்னார் நிருபர்)
(12-05-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்ததானம் செய்யுமாறு மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை (12) காலை மன்னாரில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.
மன்னார் றோட்டறிக் கழகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை இணைந்து மன்னார் தனியார் விடுதியில் இன்று புதன் கிழமை (12) காலை 9.30 மணியளவில் இரத்ததான முகாம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் வைத்தியர் ஆகியோரின் உதவியுடன் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.
இதன் போது இளைஞர், யுவதிகள், தன்னார்வத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இதன் போது இரத்ததானம் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் சன்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.