மன்னார் நிருபர்
(13-05-2021)
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடுக்கரை என்னும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இம்முறை வெளியான கா.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மாணவிகளின் வீடுகளிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயரத்தினம் ஜெயப்பிரதா மாவட்ட மட்டத்தில் கலைப்பிரிவல்3A சித்திகளை பெற்று 1ம் நிலையையும்,இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2A,B சித்திகளை பெற்று 4 ம் நிலையையும் பெற்றுள்ளனர்.

மிகவும் பின்தங்கிய கிராம மாணவர்கள் வறுமை கல்விக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.
இம் மாணவிகள் நானாட்டானில் உள்ள டிலாசால் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவிகளாவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் இம் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பல்கலைக்கழக படிப்புக்கு தேவையான மேலதிக தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிறைவடைந்ததும் எதிர்காலத்தில் எமது மன்னார் மாவட்டத்தில் தங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.