கடந்த 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் கொண்டாடப்பெற்ற ‘அன்னையர் தினத்தில்- (MOTHERS’ DAY CELEBRATIONS ) கனடாவில் இயங்கிவரும் விழித்தெழு பெண்ணே அமைப்பு சமூக நோக்கத்தோடு செயற்பட்டு வரும் பெண்மணிகளை சிறப்பாகக் கௌரவித்து
இந்த நோய்த்தொற்று கால சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவரவர் இல்லங்களுக்குச் சென்று மேற்படி அன்னையரை கௌரவித்தார்கள் இந்த அமைப்பின் அங்கத்தவர்கள். இந்த வரிசையில், விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஸ்தாபகரும் தலைவியுமான திருமதி சசிகலா நரேந்திரா மற்றும் ஸ்காபுறோ ‘ஏஞ்சல் பெசன்ஸ் உரிமையாளர் திருமதி சுஜாதா ஆகியோர் ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அவர்களை கேடயம் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கி அவரது இல்லத்தில் கௌரவத்தார்கள்..
இவரைத் தொடர்ந்து திருமதிகள் வசந்தாதேவி கோபாலபிள்ளை, கமலாம்பிகை சாந்தலிங்கம், ராஜி அரசரட்ணம் ஆகியோரை முறையே நிலா ரவீந்திரன், சஜி சங்கர் நல்லதம்பி, திருமதிகள் இந்துராணி,காஞசனா ஆகியோர் அவரவர் இல்லங்களுக்குச் சென்று கேடயங்கள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவித்தனர்.
இங்கு காணப்படும் படங்கள் நான் பெண்மணிகள் கௌரவிக்கப் பெற்றபோது தனித்தனியாக எடுக்கப்பெற்றவையாகும்.