இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் காலமானார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 18ம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு – சேனையூரில் 1941 ஜனவரி 01ஆம் திகதி பிறந்த இவர் திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபராகவும், தம்பலகாமம் கோட்டக் கல்வி அலுவலகத்தின் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இறக்கும் போது வயது 80 த.தே.கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினராக விளங்கிய இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலப்பகுதியில் சிறந்த சேவையாற்றியதாக தொகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்