(மன்னார் நிருபர்)
(18-05-2021)
வவுனியாவில் இன்று (18) செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.
-வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்ரிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்ரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம், டெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.