யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “காலை கதிர்” தினசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அல்லது திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விரும்புகிறார். எனவே அவர் நினைக்கிறார் திரு. சுமந்திரனின் கால்களைப் பிடிப்பதே இதற்கான சரியான வழி என்று. பதவிகளை அணுக சிறந்த வழி. இவை தான். எனவே சுமந்திரன் இனப்படு கொலை நடப்பதாக கூறுவதாக பொய் கூறுகிறார். சுமந்திரனை பாது காக்கிறார்.” இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
சுமந்திரன் ஒரு வழக்கறிஞராக அவர் எதையும் உடனடியாக இனப்படுகொலையா அல்லது இல்லையா என்று சொல்ல முடியும் என்று சுமந்திரன் கூறுவது எங்களுக்கு நீண்ட காலமாக தெரியும்.
ஆனால் தமிழர் விடயத்தில் அவர் “இது ஒரு இனப்படுகொலை அல்ல” என்றார்.
இது சமீபத்திய தமிழ் பக்க கட்டுரையில் ஒரு சான்று.
இப்போது தமிழருக்கு நடந்தது இனப்படு கொலை என்று சுமந்திரன் கூறுவதாய் “காலை கதிர்” ஆசிரியர் ஒரு பெரிய பொய்யைக் கூறுகிறார் .
போர்த்துகீசர் , ஓல் லாந்தர் மற்றும் பிரிட்டிஷ் ஆகியோரை தமிழர்கள் நக்கினார்கள் என்று சோல்பரி பிரபு கூறி . தமிழர்களுக்கு எந்த அரசியல் சுதந்திரமும் தேவை இல்லை என்றும் . ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறியவுடன், தமிழர்கள் சிங்களவர்களை நக்குவார்கள் என்றும், இதனால் அரசியல் தீர்வை பற்றி அழுத்தம் தர மாடடார்கள் என்றும் பிரபு சோல்பரி கூறினார் என்று ஒரு சரித்திரம் .
ராஜபக்ஷ அரசாங்கத்தால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர், ஆனால் “காலை கதிர்” ஆசிரியர் பவுத்திரமாக அடை பட்டு விடுபட்டார். பின்பு ராஜபக்ஷவுடன் விருந்துகளும் வைத்திருந்தார்.
“காலை கதிர்” ஆசிரியரைப் போல தமிழர்கள் இருக்கும் வரை, தமிழர்கள் அரசியல் சுதந்திரத்தைக் காண மாட்டார்கள்.
இவ்வாறு மேற்படி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது