குடிவரவு ஆலோசகர்களின் செயற்பாடுகளை மேற்பார்வை
செய்யவும் தனியான பிரிவு நிறுவப்பட்டுள்ளது
ஒன்ராறியோ மாகாணத்தில் குடியேறி இங்கு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களை இங்கு அழைக்க விரும்பும் கனடிய வேலை வழங்குவோரின் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்யும் பொறுப்பை தற்போது ஒன்றாரியோவின் தொழில் அமைச்சு ஏற்றுள்ளது.
மேலும் ஒன்ராறியோவின் பொருளாதாரத்தை அதிகரிக்கத் தேவையான திறன்களையும் அனுபவத்தையும் கொண்டவர்களிடமிருந்து வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை கவனிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும்.
இவ்வாறாக வெளிநாட்டு தொழில் வல்லுனர்களை ஒன்றாரியோவிற்கு அழைக்கும் போது, அதில் சம்பந்தப்படும் குடிவரவு ஆலோசகர்களைக் கண்காணிக்குவும் ஒரு தனியான பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார், ஒன்றாரியோ மாகாணத்தின் தொழில் அமைச்சர் McNaughton. நேற்று மாலை ஒன்றாரியோவில் உள்ள பல்லின பத்திரிகையாளர்களை இணையவழி; ஊடாக சந்தித்து கலந்துரையாடி பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாடுகையில் “ஒன்றாரியோ மாகாணத்தில் தொழில் வல்லுனர்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உள் நாட்டில் அவ்வாறானவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தகுதியுள்ளவர்களாக கொண்டு வருவதோடு, எங்கள் மாகாணத்தில் உடனடியாக தேவையாக உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாடுகளிலிருந்து அழைக்க வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். ஒன்றாரியோ குடிவரவாளர் பரிந்துரைக்கும் திட்டத்தின் (OINP ); என்னும் திட்டத்தின் படி ஒன்றாரியோவில் பணியாற்றக் கூடிய தகுதி வாய்ந்தவை வேலை வழங்கக் கூடிய நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் அழைக்க விரும்பும் போது, இங்குள்ள குடிவரவு ஆலோசகர்கள் தங்கள் பணிகளில் ஏதாவது மோசடி செய்கின்றார்களா என்பதையும் நாம் கவனிக்கவுள்ளோம். அதற்காக மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
எனினும் எவ்வளவு விரைவாக தொழில் வல்லுனர்களை இங்கு அழைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் அழைக்க முயல்வோம். அதற்காகவே எமது தொழில் அமைச்சோடு குடிவரவு தொடர்பான சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து குடிவரவு தொழிலமைச்சு தொடர்பான பரிசோதனைகள்; ஆகியவற்றை விரைவாகச் செய்ய இயலும்” என்றார்.
மேற்படி சந்திப்பில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான Deepak Anand மற்றும் Sheref Sabawy ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கீழக்காணும் சில சட்ட மாற்றங்களையும் அமைச்சர் நேற்றைய தினம் அறிவித்தார்
ஒன்றாரியோவின் தொழிலாளர் விவகாரங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு, ஒன்ராறியோ குடிவரவு சட்டம், 2015 (சட்டம்) திருத்த சட்டத்தின் இணக்க அதிகாரம் மற்றும் ஒன்றாரியோ குடிவரவாளர் பரிந்துரைக்கும் திட்டத்தின் (OINP); செயல்திறனை மேம்படுத்த ஒப்புதல் கோருகிறது. இந்தத் திருத்தங்களை தவறாக சித்தரித்தல் மற்றும் மோசடி சம்பவங்களிலிருந்து பாதுகாப்பதற்கும், முடிந்தவரை திறமையாக செயற்படுத்தவும் தீர்ப்பதற்கான திட்டத்தின் திறனை மேம்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான திட்டத்தின் கடமையை சரியாகச் செய்வதற்கும் இந்த திருத்தங்கள் பயன்படும்.
ஓன்றாரியோவில் குடியேறி பணியாற்றுவதற்கு வேலை வழங்குவோரிடமிருந்தோ அன்றி விண்ணப்பதாரர்களிடமிருந்தோ நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களின் பிரதிநிதிகளிடமிருந்து தகவல்களை கட்டாயப்படுத்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநரின் அதிகாரத்தை விரிவுபடுத்துதல்;
கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்படும் உள்ள மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் சட்டத்தில் ஒரு முக்கியமான குறிப்பைப் புதுப்பித்தல், இதன் மூலம் இங்குள்ள குடிவரவு ஆலோசகர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தக் கூடிய வகையில் செயலாற்ற ஏதுவாக இருக்கும்