ஸ்காபுறோ நகரில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஏற்பாடுகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன.
பின்வரும் தகவல்களை ஸ்காபுறோ ரூஜ்பார்க் மாகாண அரசின் தொகுதியின் உறுப்பினர் திரு விஜேய் தணிகாசலம் வெளியிட்டுள்ளார்.
ஸ்காபுறோ சென்டெனியேல் கல்லூரி தடுப்பூசி வழங்கும் நிலையம்:
12 முதல் 17 வயது வரையான இளையவர்கள் உள்ள ஸ்காபாரோவில் வசிக்கும் (M1
அஞ்சல் குறியீட்டு பிரதேசம்) குடும்பத்தினர் அவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவினை இப்போது செய்துகொள்ளலாம்.
தடுப்பூசி பெறுவதற்குத் தகுதியான இளையோர் தமது பெற்றோர் / பாதுகாவலர்களுடன் சமுகமளிக்க வேண்டும். அத்துடன் வருவதற்கு முன் கட்டாயம் முன்பதிவு செய்திருத்தல் வேண்டும். முன்பதிவினை scarbvaccine.ca என்ற இணையத்தினூடாக செய்துகொள்ளலாம்.
இடம்:
Centennial College – Progress Campus
Athletic and Wellness Centre
941 Progress Avenue
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
முன்பதிவற்ற உடனடி தடுப்பூசி மையங்கள்:
மே 21
ரொறன்ரோவில் அதிக நோய்த்தொற்றுள்ள ஆ தபால் குறியீட்டு இலக்கப் பகுதியில் வசிக்கும் அல்லது பணிபுரியும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் பின்வரும் இடத்தில் வழங்கப்படும். இதில் அல்பியன் பகுதியிலுள்ள M9V, M9W, M9R ஆகிய அதிகூடிய தொற்றுள்ள இடங்களில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இடமும் நேரமும்:
1501 Albion Rd
மே 21, வெள்ளிக்கிழமை பி.ப. 5 மணி முதல் இரவு 10 மணி வரை.
மே 22,
Malvern Christian Assembly
6705 Sheppard Avenue East
மே 22, சனிக்கிழமை மு.ப. 9 மணி முதல் பி.ப. 5 மணி வரை
மே 23,
Islamic Foundation of Toronto
441 Nugget Avenue
மே 23, ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணி முதல் இரவு 8 மணி வரை
மே 23,
Lakshmi Narayan Temple
1 Morningview Trail
மே 23, மு.ப. 10 மணி முதல் இரவு 8 மணி வரை
மே 22 ரூ 23
M3H, M3J, M3K, M6L, M9L, M9M, M9N ஆகிய தபால் குறியீட்டு இலக்கப் பகுதியில் வசிக்கும் அல்லது பணிபுரியும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கல் மே 22-23 சனி-ஞாயிறு தினங்களில் மு.ப. 10 மணி முதல் பி.ப. 4 மணி வரை 2745 Jane Street இல் அமைந்துள்ள St. Jane Frances Church இல் நடைபெறும்..