(மன்னார் நிருபர்)
(23-05-2021)
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் 2 ஆவது நாளாகவும் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை (23) முழுமையாக முடங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4 மணி வரையும் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் நகரில் பொலிஸார் மற்று இராணுவத்தினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அத்தியாவசிய தேவைகள் இன்றி நடமாடுபவர்கள் மற்று பயணங்களை மேற்கொள்பவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..