யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் சிங்கள மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் நயினாதீவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய கோவிட் பெருந் தொற்று இலங்கையில் அதிகரிக்கத்த தன் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் சிங்கள மக்களின் யாழ்ப்பாணத்திற்கான வருகை எண்ணிக்கையில் குறைந்தது
ஆனால் அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து, அவசர கண் சிகிச்சைகளுக்காகவும் வேறு சத்திர சிகிச்சைகளுக்காகவும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நோயாளிகள் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இதற்கு பெருமளவானவர்கள் போதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள். அநுராதபுரம், பொலநறுவையிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்படுகின்றார்கள்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுபவர்கள் அனைவருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்களுக்கு அளிக்கப்பட வெண்டிய சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என்றும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
ஆனால், கண் சத்திர சிகிச்சைக்கு வருபவர்கள் எவருக்கும் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.
இவ்வாறாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படும் நோயாளிகள் ஒரே நேரத்தில் அதிகளவானோர் என்ற முறையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள். இதனால் மருத்துவமனையில் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புக்கள் இந்தச் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதற்கு ஊடாக ஏற்படும் என்று போதனா மருத்துவமனை மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.