(மன்னார் நிருபர்)
(24-05-2021)
சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அவர்கள் இன்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
சட்டமா அதிபர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவது தொடர்பில் கௌரவ பிரதமருக்கு அறிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அவர்கள், தமது சேவை காலத்தில் ஏராளமான குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு வழங்க முடிந்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல முக்கியமான வழக்குகளை கையாள்வதற்கும், ஏராளமான பிற வழக்குகளை ஆரம்பிப்பதற்கு கிடைத்தமையும தனது சேவை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சேவைகளாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அவர்களின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.