எச்சரிக்கின்றார் கனடாவின் பிரதான பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம்
கனடாவின் கோவிட் -19 தொற்றுநோய் வரைபை நாம் தினமும் கவனித்து வரவேண்டும். அந்த வரைபில் திடீரென ஏற்படும் மாற்றம் வீழ்ச்சியாக இருந்தால் எமது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மகிழச்சியாக இருக்கும். ஆனால் அந்த வீழ்ச்சிக்கான மிக முக்கியமான காரணி எதுவென்றால், எமது அரசாங்கமும் மாகாணங்களும் மற்றும் பிரதேசங்களின் நிர்வாகங்களும் அவற்றின் பொது சுகாதார நடவடிக்கைகளும் தான் ஆகும்.
ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் எமது அழகிய தேசத்தின் கோவிட்-19 வரைபில் திடீரென ஆபத்தான மாற்றம் ஏற்பட்டு அந்த வரைபு உயரத்திற்குச் சென்று விடும். இதனால் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிடும்.
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம். ஓட்டாவா நகரிலிருந்து அவர் விடுத்த அறிவிப்பில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் அந்த வளைவிற்கேற்ப எவ்வளவு விரைவாகச் செல்கிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். அந்த வளைவின் அடிப்பகுதிக்கு வந்தால், முன்வரிசைப் பணியாளர்கள் மற்றம் வைத்தியர்கள் ஆகியோர் தங்கள் சமூகங்களுடன் சேர்ந்து செய்கிற வேலையில் தொடர்ந்து மிகவும் கடுமையாக ஈடுபடுகிறார்கள்” என்ற டாக்டர் டாம் , தடுப்பூசிகள் அதிகரிக்கும் போது, அந்த கீழ்நோக்கிய பாதை குறித்து நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
எவ்வாறாயினும், தற்போதைய இந்த கோடை காலத்தில் சில கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதைக் கண்டு உணர்ச்சிவசப்படாமல் தொடர்ந்தும் அவர்கள் தற்போதைய பொது சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.