(மன்னார் நிருபர்)
(24-05-2021)
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் முழுமையாக முடங்கியுள்ள போதும்,அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் சென்று வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரனா’ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4 மணி வரையுமான நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுமையாக முடங்கியுள்ளனர்.
மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.
-குறிப்பாக வைத்திய தேவைகளுக்காகவும்,கர்ப்பிணி தாய்மர்hகள் உற்பட வயோதிபர்கள்,சிறுவர்களுக்கான கிளினிக்கிற்கு உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சென்று வருகின்றனர்.