யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீண்ட கால ஆங்கில விரிவுரையாளரான ( திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மறைந்த விரிவுரையார் ஶ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்களின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதனால் பல்கலைக் கழக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய மிக சிறந்த அன்புக்குரிய விரிவுரையாளராக பணியாற்றியவர் என்றும் அவரது மறைவினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறை ஒரு ஆற்றலுள்ள விரிவுரையாளரைர இழந்துள்ளது என்றும் அவரது சக விரிவுரையாளர்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் பதிவுகளை இட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.