இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை ஜம்புக்குளம் பகுதி வாழ் மக்களுக்கு தமது புதல்வர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிய கனடா மொன்றியால் வாழ் திருவாளர்கள் செல்வச் சந்திரன் குடும்பம் மற்றும் திரு தவச்செல்வன் குடும்பம் ஆகியோருக்கு கனடா ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பினர் வாழத்துக்களை தெரிவிக்கின்றனர்.
மேற்படி உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டவர்கள், கல்முனை ஜம்புக் குளம் பகுதியில் கொரோனா நோயின் ஏற்படுத்தப்பட்ட முடக்கத்தின் காரணமாக வீடுகளிலேயே தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மொன்றியால் நகர் வாழும் திருவாளர்கள் செல்வச் சந்திரன் குடும்பம் மற்றும் திரு தவச்செல்வன் குடும்பம் ஆகியவை தங்கள் புதல்வர்களான முறையே, செல்வன் ரஞ்சித், செல்வன் சாருஜன் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த காருண்ய உதவியைச் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்களை நேரடியாக கல்முனைக்கு எடுத்துச் சென்று வழங்குவதற்கு உதவிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா ஆவார்.
படங்கள் உதவி” மொன்றியா புரூட்ஸ் ஹபி நிறுவனத்தினர்…