கனடா மிசிசாகா நகரில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக பிரமுகர் ஒருவர் தனது அன்புப் புதல்வியின் பெயரில் தொடர்ச்சியாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதி வறிய மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகள் பற்றிய படங்களும் செய்தியும் எமக்குக் கிடைத்துள்ளன.
பல இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் பெருமதியான உணவுப் பொருட்களும் விவசாய உபகரணங்கள் மற்றும் பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியர்களுக்கான உதவிகளை வழங்கி வரும் இந்த வர்த்தகப் பிரமுகர் தனது அன்புப் புதல்வியான செல்வி இசானியா பெயரில் ‘இசானியா கலா மன்றம்’ என்னும் பெயரில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் மூலமாக இந்த உதவிகளைச் செய்து வருகின்றார்.
சில நாட்களுக்கு முன்னர் வன்னி பிரதேசத்தில் நெடுங்கேணி வாழ் கூலி விவசாயிகளுக்கு வழங்கிய உலர் உணவுப் பொருட்கள் தொடர்பான மேற்படி பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் மற்றும் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இங்கே காணப்படுகின்றன.
இந்த வர்த்தக அன்பரை கனடாவின் ரொரன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினர் வாழ்த்துகின்றனர்.