மனித மூளையின் அறிவார்ந்த செயல்களை பிரதிபலிக்கும்வகையிலும் செயற்கை நுண்ணறிவில் மேம்பட்டதுமான கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நரம்பிழை, சிறுநரம்பிழை அடங்கிய லட்சக்கணக்கானநரம்பணுக்கள் மனித மூளையில் உள்ளன. நரம்பிழை, சிறுநரம்பிழைகளின் வாயிலான மரபணுக்களின் பிரம்மாண்ட இணைப்பு சினேப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சவாலான உயிரி-நரம்பு சார்ந்த இணைப்பு பல்வேறு அறிவு சார்ந்த ஆற்றல்களுக்குவழிவகுப்பதாக நம்பப்படுகிறது.
மொத்த உடல் ஆற்றலில் மனித மூளை 20 சதவீதத்தை, அதாவது 20 வாட்ஸை பயன்படுத்துவதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. தற்போது உள்ள கணினி சார்ந்ததளங்கள் மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிப்பதில் சுமார் 10 லட்சம் வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகிறது.
இந்த சவாலை எதிர் கொள்வதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சிநிறுவனமாக இயங்கும் பெங்களூருவைச் சேர்ந்தஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிமையத்தின் விஞ்ஞானிகள் ஓர் புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். உயிரி நரம்பு இணைப்பைப் போன்ற செயற்கை சினேப்டிக் இணைப்பை உருவாக்கும் புதிய அணுகு முறையோடு இந்தக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெட்டீரியல்ஸ் ஹாரிசன்ஸ்’ என்ற சஞ்சிகையில் இந்தபடைப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.