(மன்னார் நிருபர்)
(31-05-2021)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை மாலை 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-இவ்வாறு உயிரிழந்தவர் இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வினோதன் (வயது-34) என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில் மீன் வலை துப்பரவு செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி வீழ்ந்துள்ளார்.
-உடனடியாக அவரை அவசர அம்புலான்ஸ் வண்டி ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
-எனினும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் திடீர் மரணத்திற்கான காரணம் இது வரை தெரிய வரவில்லை.