இலங்கையில் உள்ள தற்போதைய கொரோணாவினால் மக்கள் வெளியில் செல்லமுடியாத நிலையி விதவைகள் அங்கவீனர்கள் கூலிக்கு வேலை செய்பவர்களின் நிலையை கருத்தில் கொண்டு கனடா தொழிலதிபர் சங்கர் நல்லதம்பி அவர்களின் நிதி உதவியோடு திருகோணமலை ஈச்சிலம்பற்று உடப்புக்கேணி ஆகிய கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பெற்றன.
திருகோணமலை மாவட்டத்தில்.ஈச்சிலம்பற்று உடப்புக்கேணி ஆகிய கிராம மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்க உதவிய ரொரரோவின் மனித நேயக் குரல்-கனடா அமைப்பினருக்கும் நிதி உதவி நல்கிய வர்த்தக பிரமுகர்சங்கர் நல்லதம்பி அவர்களுக்கும்மேற்படி கிராம மக்கள் சார்பாக நன்றிகளை கூறிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைவதாக ஈச்சிலம்பற்று கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரும் கவிஞருமான திரு .த.ரூபன் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்வாதார உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட நிகழ்விறகு திருகோணமலை ஈச்சிலம்பற்றில் இயங்கிவரும் ‘சிகரம்’ கல்வி நிலையத்தினர் பக்கபலமாக விளங்கினார்கள்.
கனடாவிலிருந்து இதற்கான நிதியை வழங்கிய தொழிலதிபர் சங்கர் நல்லதம்பி அவர்களுக்கு ரொரன்ரோ மனித நேய குரல்-கனடா அமைப்பின் இயக்குனர் சபை தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
செய்தி- சத்தியன்