கனடாவில் உலகப் பகழ்பெற்ற சரவணா பவன் உணவகத்திற்கு மூன்று கிளைகள் உள்ளன. ஒன்றாரியோவின் ஸ்காபுறோ, மிசிசாகா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் ஒன்று என இந்த கிளைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்த மூன்று கிளைகளையும் உரிமையாளராக விளங்கி அதனை நிர்வகித்து வருகின்றவர் திரு கணேசன் சுகுமார் ஆவார்.
அவரது சிந்தனையின் விளைவாக தமது நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இங்குள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணி மொத்த தொகையாக இந்த வருடத்திற்குள் மூன்றரை இலட்சம் டாலர்களை Scarborough Health Network Foundation என்னும்’ ஸ்காபுறோ நகரில் இயங்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நற் காரியத்திற்கு மேற்படி மூன்று கிளைகளிலும் பணியாற்றும் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து மக்களுக்கும் நோய்த் தொற்று ஒரு சவாலாக இருந்த வேளையில், வைத்தியசாலைகளும் தங்கள் சேவைகளை அதிகரிக்க வேண்டி வந்தது. இதனால் நிதி நெருக்கடியை வைத்தியசாலைகள் சந்தித்தன.
எனவே கனடா சரவணா பவன் உணவகக் குழுமத்தின் உரிமையாளர் திரு கணேசன் சுகுமார், வைத்தியசாலைகளின் இந்த நெருக்கடியான நோய்க் கால சேவைக்காகவும் அங்கு பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்காகவும் உடனடியாக நிதி அன்பளிப்பு செய்ய விரும்பினார்.
இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் சரவணா பவன் உணவகத்தின் மூன்று கிளைகளிலும் வழைமை போன்று வியாபாரம் நடைபெறாவிட்டாலும், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும், அவர் சோர்ந்து விடிவிடவில்லை.
தங்கள் நோக்கமாக இருந்த தொகையின் ஒரு பெரும் ப குதியாக இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் கனடிய டாலர்களை Scarborough Health Network Foundation நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்காக வைத்தியசாலையின் பிரதிநிதியாக Rayan Baillie -(Vice President of Scarborough Health Network Foundation) அவர்களை அழைத்து இதற்கான காசோலையை வழங்குவதென முடிவடுக்கப்பட்டது.
அண்மையில் சரவணா பவன் உணவகத்தின் ஸ்காபுறோ கிளையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, வைத்தியசாலையின் பிரதிநிதியான Rayan Baillie அவர்களிடம் $ 270,000.00 க்கான காசோலை கையளிக்கப்பெற்றது.
மூன்று கிளைகளின் உரிமையாளரான திரு கணேசன் சுகுமார், ஒன்றாரியோ கிளைகளின் முகாமையாளர் முஜாஹிட் மற்றும் கிளையில் பணியாற்றும் ஊழியர் ஆகியோர் சகிதம் காசோலையைப் பெற்றுக்கொண்ட Rayan Baillie -(Vice President of Scarborough Health Network Foundation) ஆகியோர் இங்கு காணப்படும் படங்களில் உள்ளனர்.
இந்த அர்ப்பணிப்பு மிக்க உயர்ந்த சேவைக்கான கனடாவில் இயங்கும் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கணேசன் சுகுமார் அவர்களுக்கு தெரிவிக்கின்றது.