இலங்கையின் மலையகப் பகுதிகளில் மண்சரிவு மற்றும் மழை காற்று ஆகியவற்றால் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பாதிப்புக்கள் இடம் பெற்ற ஹற்றன் வெளி ஓயா கீழ் டிவிசன் தோட்டப்பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உ உதவிகள் வழங்குமாறு கனடா மனித நேயக் குரல் அமைப்பினருக்கு கிடைத்து வேண்டுகோளின் பிரகாரம், கனடா வர்த்தகப் பிரமுகர் பாஸ்கரன் சின்னத்துரை அவர்களை நாடியபோது அவர் நிதி அன்பளிப்பை வழங்கினார்.
அவர் வழங்கிய நிதி அன்பளிப்பு பாதிக்கப்பட்ட ஹற்றன் வெளி ஓயா கீழ் டிவிசன் தோட்டப்பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக வழங்கப்பெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை ஹற்றன் பிரதேசத்தில் இயங்கும் ‘ இருபது இருபது இளைஞர் கழகம்’ செய்திருந்தது. மேற்படி கழகத்தின் அங்கத்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அவர்கள் வாசல் வரை சென்று சந்தித்து அவசர தேவைகளைக் சமாளிக்க பணம் வழங்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளால் வர்த்தக நிறுவனங்களில் தொகையான உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய இயலாத காரணத்தாலேயே இவ்வாறு பணம் வழங்கப்பட்டது என்று மேற்படி ‘ இருபது இருபது இளைஞர் கழகம்’ கனடா- ரொரன்ரோ மனித நேயக்குரல்’ அமைப்பினருக்கு அறியத்தந்துள்ளனர்.
செய்தி:- சத்தியன்