மன்னார் நிருபர்
(2-06-2021)
இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
அங்கு அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு தொடரும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.