மனித உடலில் எத்தனையோ பல வித தாதுக்களும், உப்புக்களும் உண்டு. உடல் அணுக்களில் பெருமளவில் பரவியுள்ள தாது பொட்டாசியம் என்பதாகும். ஒரு சராசரி மனத உடலில் மொத்தம் 120 கிராம் பொட்டாசியம் உள்ளது. இதில் 117 கிராம் உடல் அணுக்களுக்குள்ளேயும் மிகுதி 3 கிராம் அணுக்களின் வெளித் திரவங்களிலும் காணப்படுகின்றன. மற்றய தாதுக்களைப் போலவே பொட்டாசியமும் மனித உடம்பின் வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவுகிறது. முக்கியமாக உடல் அணுக்களைத் தூண்டி 24மணி நேரமும் ஓய்வில்லாமல் செயல்படச் செய்வுது இந்தப் பொட்டாசியமே. ஒரு விரலை மடக்கி நீட்டுவதற்கு பொட்டாசியம் முகவும் முக்கியம் என்றால் மற்றய அவயங்களின் இயக்கத்திற்கு பொட்டாசியத்தின் அவசியம் எவ்வளவு தேவை என்பதை உணர முடியும்.
இருதயம், நுரையீரல், மூளை. சிறுநீரகம், கல்லீரல், முக்கிய உறுப்புகளில் திசுக்களை முறையாகப் பணிசெய்ய வைப்பதில் பொட்டாசியத்தின் பங்கு அளப்பரியது. நரம்புகள் தளர்ச்சி அடையாமல் இருக்க வேண்டும் என்றால் பொட்டாசியம் அவசியம் தேவை. இருதயம் இயங்குவதற்கு மிகவும் முக்கியமாக இந்தத் தாது தேவைப்படுகிறது. சராசரி வயதுள்ள ஒருவருக்கு தினமும் 2.5 மருந்து, 3.3 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர்களுடைய நிறைக்கு ஏற்ப இத்தாது தேவைப்படும்.
பொட்டாசியம் குறைந்தால்:
சராசரி உணவு உண்பவர்களுக்கு பொட்டாசியம் குறைவு ஏற்படவதற்கு வாய்ப்பில்லை. சாப்பிடாமல் இருப்பவர்கள். வாந்தி. வயிற்றுப்போக்கு அதிகமான வியர்வை. சிறநீர் வெளியேற்றம் இவற்றால் பொட்டாசியம் உடம்பில் குறையலாம். சலரோகம். இருதயநோயாளிகளுக்கும் பொட்டாசியம் குறைய வாய்ப்பபுள்ளது. இதை விட ளுவநசழைன என்னும் மருந்தக்கள் பாவிப்பதாலும் இத்தாது குறையலாம். உடமிபிலுள்ள மொத்தப் பொட்டாசியத்தில் 10 வீதம் குறைந்தாலே அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
பொட்டாசியம் மிகவும் குறைந்த விட்டால் சிறுகுடல் இயக்கம் தடைப்பட்டு வயிறு ஊதிவிடும். பொட்டாசியம் உடம்பிலும், இரத்தத்திலும் குறையும்போது இரத்தப்பரிசோதனை மூலமும், ஈ.சி.ஜி என்னும் இருதயவரைபட மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
பொட்டாசியம் அதிகமானால்;
பொட்டாசியம் உடம்பில் அதிகரிப்பது என்பது மிகவும் அபூர்வமானதே. (யுனனளைழn’ள னுளைநயளந) அடிசன் வியாதி. அமிலத் தேக்கநிலை. சிறுநீரக செயல் இழப்பு, தவறான இரத்தத்தைச் செலுத்ததல் போன்ற நிலைகளில் பொட்டாசியம் இரத்தத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஈ.சி.ஜி என்னும் இரதய வரைபடத்தைப் பார்தால் மட்டுமே இந்த அதிகரிப்புத் தெரியவரும். இந்தபொட்டாசியம் அதிகமாகிவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
நிறை அதிகரித்தால், இருதயம் அவஸ்த்தைப்படும்.
உங்கள் நிறை இருக்க வேண்டிய அளவை விட 10 அல்லது 12 கிலோ கூடுதலாக இருந்தால் இருதயம் படும்பாடு உங்களுக்குத் தெரியுமா?. தேவை இல்லாத ஊழச்சதையால் 2300 கிலோ மீற்றர் தூரத்திற்கு உடலக்குள் இருக்கும் இரத்தக் குழாய்களுக்கு உள்ளே கூடுதலாக இரத்தத்தைப் பாய்ச்சுகிறது. இதனால் இருதயம் தனது சுயமான இயக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டி உள்ளது. ஒரு மடங்கிற்கு 15 வருடங்களாகும். உதாரணமாக 80 வயதில் மரணம் அடைய வேண்டிய ஒருவர் 15 வருடங்களுக்கு முன்னரே இறந்து விடுவார். இது எல்லோருக்கும் பொருந்தும். உடல்நிலையில் கவனம் செலுத்தினால் நன்றே வாழலாம்.