கனடா சித்தன்கேணி ஒன்றியத்துடன் இங்கிலாந்து சித்தன்கேணி மக்களும் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வைத்திய உபகாரணங்களுக்காக ரூபா 2 மில்லியன் 314 ஆயிரத்துக்கும் அதிகமான நிதியினை சேகரித்து கொடுத்துள்ளார்கள்.
இந்த நிதியின் காசோலையினை யாழ் போதனா வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜமுனானந்தராஜா அவர்களிடம் சித்தன்கேணி ஆன்மிக அறக்கட்டளை தலைவர் லயன்ஸ் மா . தவகுமாரன், Dr R . கணேசமூர்த்தி மற்றும் ஆன்மிக அறக்கட்டளை போஷகர் சி . ஸ்கந்தமயம் ஆகியோர் 09-06-2021 புதன் கிழமை நேரில் சென்று கையளித்துள்ளனர்.
இந்த நிதி உதவியில் பங்குபற்றி நிதி வழங்கிய கனடா – இங்கிலாந்து சித்தன்கேணி மக்களுக்கு பாராட்டுக்கள்.