(மன்னார் நிருபர்)
(09-06-2021)
நாட்டில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பயணத் தடை காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் , கடற்தொழில் செய்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகல மாவட்டங்களிலும் பாதீக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களும் தமது உற்பத்திப் பொருட்களை சந்தை படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் முஹமட் ஜீப்ரி (வயது-38) என்ற குடும்பஸ்தர் தனது வீட்டிலேயே இயற்கை முறையில் விவசாய செய்கையை மேற்கொண்டு வருவதோடு,தேனீ வளர்ப்பினையும் மேற்கொண்டு வருகின்றார்.
தனது தோட்டத்தில் பச்சை மிளகாய்,வெண்டி,வெற்றிலை,மஞ்சல் போன்றவை பயிரிடப்பட்டு இயற்கை முறையில் விவசாயச் செய்கையை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த செய்கைகளுக்கு தேவையான பசளையினை இயற்கையான முறையில் தானே தயாரித்து வருகின்றார்.
தனது தோட்ட செய்கைகளுக்கு தேவையான பசளைகள் தயாரிக்கப்பட்டதோடு, அவற்றினால் தமது தோட்டம் செழிப்பாக உள்ளதாகவும்,உச்ச பயணை அடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அப்துல் முஹமட் ஜீப்ரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்போதைய கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக தனது உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த முயடிhத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் உரிய அதிகாரிகள் வருதை தந்து பார்வையிட்டதோடு,சந்தைப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
தனது உற்பத்தி பொருட்களை மன்னார் நகர் மற்றும் கொழும்பிற்கு அனுப்பி வைப்பதோடு, தனது கிராமத்திலும் விற்பனை செய்வதாக தெரிவித்தார்.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தனது உற்பத்திக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பது இல்லை என கவலை தெரிவித்தார்.
மேலும் தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்துல் முஹமட் ஜீப்ரி தெரிவித்தார்.முதல் கட்டமாக இரண்டு பெட்டிகளில் தேனீ வளர்த்து வருகின்றார்.சுமார் மூன்று மாதங்களை கடந்து விட்டது.
தனது தேனீ வளர்ப்பு வெற்றியை தந்துள்ளது.தொடர்ந்தும் தனது தேனீ வளர்ப்பை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.தனது முயற்சிக்கு உரிய திணைக்களம் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.