நேற்ற புதன்கிழமை மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் தென்னிலங்கையிலிருந்து கொரோனாத் தொற்றாளர்களை ஏற்றிக் கொண்டு வட பகுதி சிகிச்சை நிலையங்களுக்கு பயணித்த பஸ்களில் ஒன்றே கொல்லப்பட்டவரை மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பின்னர் மரணத்தை தழுவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.
மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பேருந்துகளும் அங்கிருந்து அனுப்பப்பட்டன