(மன்னார் நிருபர்)
10-06-2021
-அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.