ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
பொறுப்புக்களும், சிறப்புக்களும் சேரக்கூடிய சீரான வாரம். தனவரவு பெருகும். புதிய முதல்களைத் தவிர்க்கவும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.நல்லோர் நட்பு கிட்டும். திறமைகள் வெளிப்படும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். காதலில் பிரிவு ஏற்படும். பாராட்டுக்கள் தேடிவரும். கல்விக் கடன் ஏற்படும். கடமையில் தடங்கல் ஏற்படும். விவாத முயற்சி வெற்றி தரும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: வீரவிநாயகர்
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு , அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, D;
ரிஷபம் :
வெளியூர் பயணத்தால் வெகுமதி கிடைக்கக்கூடிய வாரம். சோதனைகள் நீங்கும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை மாற்றம் தரும். வாழ்வு நிலை உயரும். மனைவி சலசலப்பு ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவால் பணவிரயம் ஏற்படும். கல்வியில் கவனம் குறையும். லாபம் திருப்தி தரும். வசதிகள் கூடும். உடல் ஆரோக்கியம் குறையும். மனவேதனை குறையும். வலம்புரி வழிபாடு வளம் சேர்க்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: பாதளபைரவர்
அதிர்ஷ்ட எண் – 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I, S;
மிதுனம் :
தடங்கல் இல்லாத தனவரவுகளை சந்திக்கக்கூடிய நல்ல வாரம். காரியம் வெற்றி தரும். நட்பு பெருகும். பணப் பற்றாக்குறை நீங்கும். மாற்று இனத்தவர் வாழ்பு கிட்டும். மதிப்பு உயரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். கௌரவமான நாள். நந்தி வழிபாடு நன்மை தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண் – 4, 2, 1, 0; அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, K;
கடகம் :
ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கக் கூடிய அற்புதமான வாரம். மதி நுட்பம் தேவை. டிரான்ஸ்போர்ட் தொழில் சிறந்த லாபம் தரும். சந்தோஷம் அதிகமாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப கௌரவம் உயரும். அற்புதமான நாளாக அமையும். நன்மைகள் நாடிவரும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும்.
ஆடம்பரத்தை விரும்புவீர்கள். வராத கடன் வந்து சேரும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: முருகப்பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 5, 1, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – சில்வர் கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, J;
சிம்மம் :
நலமும் வளமும் நாடி வரக்கூடிய நன்மையான வாரம். யோகமான நாள். உணவுத் தொழில் உயர்வு தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். பங்குச் சந்தை தொழில் லாபம் தரும். மன அமைதி நிலவும். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். மனைவி அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட வேண்டும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சீரான வாழ்வமையும். சிந்தனைகள் மேலோங்கும். அம்பிகை வழிபாடு ஆரோக்கியம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: வடிவுடை அம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, 1, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – சில்வர் கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, J;
கன்னி :
அனுகூலமும், ஆதாயமும் கிடைக்கக் கூடிய அற்புதமான வாரம். தேக ஆரோக்கியம் கூடும். உடல் நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளிடத்தில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். புதுத் தொழிலை ஆரம்பிக்க முன்வருவீர்கள். சமூக செயலில் ஈடுபடுவீர். மற்றவர்களிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர். இறை விழிப்புணர்வு கூடும். தேவையில்லாத பயங்கள் நீங்கும். மனதைரியம் கூடும். உற்சாகம் கூடும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: குபேர லட்சுமி
அதிர்ஷ்ட எண் – 3, 2, 7, 1; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, V;
துலாம் :
மர்மநோயும் தர்மவினையும் விலகக்கூடிய நல்ல வாரம். விநாயகர் வழிபாடு வெற்றி தரும். கவனமுடன் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல. புதிய முயற்சியினை உடனே செயல்படுத்தவும். திடீர் செலவுகள் ஏற்படும். தனவரவுகள் தடைப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். பழைய பகை மாறும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். மங்கல செய்தியால் மனம் மகிழும். குதூகலம் தாண்டவமாகும். நவகிரஹ வழிபாடு நன்மை தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: .மூர்ஷிக வாகனன்;
அதிர்ஷ்ட எண் – 7, 1, 4, 3; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – P, F;
விருச்சிகம் :
பாக்கியமான சூழ்நிலைகள் படியேறி வரக்கூடிய நல்ல வாரம். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு ஆனந்தம் குடிகொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். தொல்லை தருகிறவர்கள் விலகி செல்வர். வயிற்று உபாதை வந்துசேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஆதித்ய பகவான்
அதிர்ஷ்ட எண் – 5, 1, 7, 4 அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, M.
தனுசு :
நேர்மையான உள்ளங்களுக்கு மேன்மையான வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடிய வாரம். காரிய வெற்றி கிட்டும் நாளாக அமையும். பதவி வாய்ப்பு வரும். வாதகம் விலகும். வருமானம் கை கூடிவரும். நண்பர்களால் நன்மை உண்டு. பெற்றோர் உதவிகள் கிடைக்கும். பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். உறவினரால் முன்னேற்றம் உண்டு. கட்டிடத் தொழில் லாபம் தரும். பொன்னான நேரங்களாக அமையும். எள்தானம் ஏற்றம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: கருமாரி அம்மன்;
அதிர்ஷ்ட எண் – 5, 3, 1, 9 அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – T, M.
மகரம் :
அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரக்கூடிய அற்புதமான வாரம். ஆக்கப் பூர்வமான நாள். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். சமுதாய விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. மங்கல செய்தி வரும். முயற்சி பலன் தரும். வாகனச் செலவுகள் ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும். பணவரவு உயரும். பைரவ வழிபாட்டால் பாவம் தீரும்.
வழிபடவேண்டியதெய்வம்: எமதர்மராஜா
அதிர்ஷ்ட எண்: 9, 4, 8, 7; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, R;
கும்பம் :
ஆதாயமோ அனுகூலமோ சேதாரமில்லாமல் கிடைக்கக்கூடிய ஆதாரமான வாரம். அமைதியான நாள். வளமான வாழ்வு அமையும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். காதல் எண்ணம் ஏற்படும். மங்களச் செய்தி வரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பங்குத் தொழில் கவனம் தேவை. பழையக் கடன் தீரும். குதூகலம் சேரும். வருமான வாய்ப்பு கூடி வரும். கல்வி ஆர்வம் கூடும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: பிரம்மதேவர்
அதிர்ஷ்ட எண்: 1, 7, 5, 2; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, U;
மீனம் :
பற்றாக்குறைகள் நீங்கி எட்டாக்கனி கிடைக்கக் கூடிய ஏற்றமான வாரம். பொறாமைகள் விலகும்நாள். பிரார்த்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் சிறக்கும். நிதிப் பற்றாக்குறை நீங்கும். தாய் நலனில் கவனம் தேவை. வழக்குகள் சாதகமாகும். வாகன செலவு ஏற்படும். உலோகத் தொழில் லாபம் தரும். கடன் பிரச்சனைத் தீரும். ஆடம்பர எண்ணம் உருவாகும். அன்னதானம் ஆரோக்கியம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: சரஸ்வதிதேவியார்
அதிர்ஷ்ட எண்: 6, 1, 7, 4; அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, K.