அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் வெற்றி பெறவதற்கும் தேவையான திறமையையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய புதிய 9ஆம் வகுப்புக்கான கணித பாடத்தினை கல்வி அமைச்சர் ஸ்டீபன் செச்சே வெளியிட்டு வைப்பதாக அறிவித்தார்.
வருகின்ற செப்டெம்பரில் வரவிருக்கும் மேற்படி புதிய பாடத்திட்டமானது, குறிப்பாக பின்வருவனவற்றில் மாணவர்களின் வாழ்க்கைக்கு உகந்த கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தினைக் கொண்டிருப்பதுடன், வேலைவாய்ப்புகளில் அவர்களின் வெற்றிக்கும் உறுதுணையாக அமையும்:
– குறியீட்டு முறை, தரவுகளின் அடிப்படையிலான கல்வியறிவு, கணித மாதிரிகள் மற்றும் நிதியியல் தொடர்பான கல்வியறிவு போன்றன புதிய பாடத்திட்டத்தின்படி கட்டாயமாக அமையவுள்ளன.
– 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரையும் பயன்பாட்டுக் கல்வி மற்றும் படிப்பில் நடைமுறையிலிருந்த streaming முறைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்முறைமையானது கடந்த காலத்தில் சில மாணவர்களுக்கு பாதகமானதாக அமைந்திருந்தது.
இப்புதிய பாடத்திட்டம் ஒன்ராறியோவில் உள்ள மாணவர்கள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் எதிர்கொண்ட பின்னடைவினைச் சரிசெய்வதற்காக அரசாங்கத்தினால் போடப்பட்டுள்ள அடுத்த நான்கு ஆண்டுக்கான 200 மில்லியன் டொலர் கணிதத்துக்கான மூலதனத்தின் அடுத்த கட்டமாகும். கோடைகால கற்பித்தல், பயிற்சி மற்றும் கல்வியாளர்களுக்கான பயிற்சி, அவற்றுக்கான உபகரங்களுக்கான வளங்களை அளிப்பது போன்றவை உட்பட கணிதக் கல்விக்கான மேலதிக நிதியினை அரசாங்கம் அளித்துள்ளது.
ஒன்றாரியோ கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பை உதயன் ஆசிரிய பீடத்திற்கு அனுப்பிவைத்தவர் விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர். ஸ்காபரோ – றூஜ் பார்க்