கனடா – லண்டன் நகரில் இஸ்லாமிய குடும்பம் ஒன்றை தனது வாகனத்தால் மோதிக் கொன்ற வெள்ளையின இளைஞனான 20 வயதான நதானியேல் வெல்ட்மேனை பொலிசார் கைது செய்த போது அவர் சிரித்தபடி நின்றார் என்றும் அத்துடன் தனது உடலை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய உடற் கவசனம் மற்றும் தலையைப் பாதுகாக்கக் கூடிய இராணுவத்தினருக்குரிய தலைக் கவசம் ஆகியவற்றை அணிந்திருந்ததாக் கூறப்படுகின்றது.
அந்த இளைஞன் இரத்தக் கறைகள் நாற்புறமும் சிதறியிருந்த தனது வாகனத்திலிருந்து வெளியே வந்தபோது பொலிசார் கைதுசெய்ததாகவும் அப்போது அந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்யும் படி அருகில் நின்ற ஒரு டாக்சி சாரதியை கேட்டுக் கொண்டதாகவும் அந்த கோரமான கொலைச் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
கனடாவின் லண்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இந்த இன வெறுப்புக் காரணமாக இடம்பெற்ற நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்த்தானிலிருந்து கனடாவிற்கு குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தை வேகமாகக் செலுத்தி நதானியேல் வெல்ட்மேன் என்ற இருபது வயது இளைஞரே கொன்றார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் இடம் பெற்று சில நிமிடங்களில் ஒரு டாக்ஸிச் சாரதி தனது இடைவேளையை எடுத்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் தனது கறுப்பு நிற வாகனத்தை வேகமான ஓட்டிச் சென்று, நிறுத்தியிருந்த சாரதியின் டாக்சிக்கு அருகில் முட்டும் படியாக நிறுத்திய பின்னர், தான் பலரை தனது வாகனத்தால் மோதிக் கொன்றதால் போலீஸை அழைக்கும்படி கேட்டுக் கொண்டதாகசுவும் டாக்ஸி நிறுவனத்தின் லண்டன் பகுதி தலைவர் ஹசன் சவேலகி என்பவர் மேற்படி டாக்ஸி சாரதி சார்பில் பொலிசாரிடம் தெரிவித்தார்.
போலிசார் வாகனத்திலிருந்து கொலைச் சந்தேக நபரை வாகனத்திலிருந்து வெளியேற்றியபோது, அவர் சிரித்தபடியே இறங்கியதாகவும் இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது டாக்ஸ் டிரைவர் மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை என்றும் டாக்சி நிறுவனத் தலைவர் சவேஹிலகி கூறினார்,
இந்த இனக் குரோத அல்லது மத நம்பிக்கைக்கு எதிரான படுகொலைத் தாக்குதலிலி பலியானவர்கள் 46 வயதுடைய சல்மான் அப்சல், 44 வயதுடைய அவரது மனைவி மடிஹா, 15 வயதுடைய அவர்களின் மகள் யும்னா, மற்றும் 74 வயதான அந்தக் குடும்பத்தின் பாட்டி, ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், இறந்து இந்த ஜோடியின் ஒன்பது வயது மகன் பயஸ் என்பவர் லண்டன் மருத்துவமனையில் பலத்த காயங்களோடு தொடர்ந்து கிசிக்சை அளிக்கப்படுகின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇருக்கிறார்.
கிடைக்கப்பெற்ற விபரங்களின்படி, 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, இரவு 8.00 மணியளவில் மேற்படி குடும்பத்தின் ஐந்து பேர் வடமேற்கு லண்டனில் ஒரு மாலை நடைப்பயணத்திற்கு வெளியே வந்தபோது, ஒரு கருப்பு டிரக் வீதியோரத்தில் காத்திருந்து வந்தது போன்று வெளியேறி, சிவப்பு விளக்கில் வீதியைக் கடக்கக் கூட்டமாகக் காத்திருந்த இந்தக் குடும்பத்தினர் மீது மோதிய பின்னர் மிகவும் வேகமாக அங்கிருந்து சென்றது என்றும் கொலைச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் கனடா- லண்டன் நகரத்தின் வரலாற்றில் முதல் பயங்கரமான படுகொலையாகக் கருதக் கூடியது என்பதால் கனடா எங்கும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் அச்சத்தை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து 14 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு குடிபெயர்ந்ததாக இந்தக் குடும்பம் ஒரு சிறப்பான குடும்பமாக விளங்கியதாக அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாழும் அயலவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவத்தை முஸ்லிம் சமூகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு “பயங்கரவாத தாக்குதல்” என்று குறிப்பிட்டார்.
மேற்படி படுகொலைச் சம்பவத்திற்கு செவ்வாய்கிழமை கனடிய நாடாளுமன்றம் கூடிய போது அங்கு பிரதமர் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆகியோர் உரையாற்றினர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனைவரும் “இது ஒரு பயங்கரவாத தாக்குதல், வெறுப்பால் தூண்டப்பட்டது, எங்கள் சமூகத்தின் பலரின் இதயங்கள் தகர்தெறியப்பட்டுள்ளன ” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
“இந்த நாட்டில் இனவெறி மற்றும் இனரீதியான வெறுப்பு இல்லை என்று யாராவது நினைத்தால், நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: ஒரு மருத்துவமனையில் உள்ள ஒரு குழந்தைக்கு இதுபோன்ற வன்முறையை எவ்வாறு விளக்குவது? என்றும் குறிப்பிட்டார்.
அன்று செவ்வாய்க்கிழமை 8ம் திகதி மாலை லண்டன் நகரில் உள்ள பிரதான இஸ்லாமிய பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்ற மாபெரும் இரங்கல் கூட்டத்தில் பிரதமர் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர ஆகியோரும் ஒன்றாரியோ மாகாண முதல்வர், ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர், ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவர், மற்றும் லண்டன் நகரத்தின் மேயர், லண்டன் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தின் தலைவர், பல்வேறு இடங்களிலிருந்து கலந்து கொண்ட பள்ளிவாசல்களின் தலைமை பிரதிநிதிகள் மற்றும் பலர் அங்கு உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் இன வேறுபாடு இன்றி கலந்து கொண்ட இந்த இரங்கல் நிகழ்வில் கனடிய பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் நிகழ்வின் இறுதிவரையும் காத்திருந்து விடைபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து கனடாவின் பல மாகாணங்களிலும் பெருந்தொகையாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சியோடு காணப்பட்டார்கள் என்றும் தங்கள் உயிர்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பது அறியாமல் உள்ளோம் என்றும் அச்ச உணர்வோடுட பேசிக் கொண்டார்கள் என்றும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த கொலைச் சம்பவத்தில் இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் இறுதி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனவாதத் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட இந்த குடும்பத்திற்கான கனடா தழுவிய நிதி சேகரிப்பில் சுமார் ஆறு இலட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சந்தேக நபர் மீது முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டபோது, தனக்காக வாதிடுவதற்கு அரசின் சார்பான தனது சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கேட்டுகொண்டதாகவும் அறியப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஜூன் 17 அன்று நீதிமன்றத்திற்குத் திரும்பவும் விசாரணைக்கு எடுக்குமாறு கோரினர், ஆனால் அரச வழக்குரைஞர்கள் ஜூன் 14ம் திகதி வழக்கை விசாரணைக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜூன் 14ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.