கனடா வாழ் சிவாச்சாரியப் பெருமகனார் சிவாகம கலாநிதி, சிவஶ்ரீ நா.சோமாஸ்கந்த சிவாச்சாரியார் (சுன்னாகம்) அவர்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பெற்ற ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கனடா இந்துப் பெருமக்களை மாத்திரமல்ல ஏனைய மதங்களைப் பின்பற்றும் பல அன்பர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது
இலங்கை சைவ சமய குரு மரபில், கடந்த ஐந்து தசாப்தங்களாக சிவாச்சாரியர்களுக்கு, சைவ மக்களுக்கு வழிகாட்டியாக ,ஆசானாக அகிலம் எங்கும் வழிகாட்டியபடி, பிரகாசிக்கும்( MHC-Modern Hindu Culture .Org) இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன ஸ்தாபகர், சிவாகம கலாநிதி, சிவஶ்ரீ நா.சோமாஸ்கந்த சிவாச்சாரியார் (சுன்னாகம்) அவர்களுக்கு அண்மையில் தமிழகத்தில், சிவபுரம் குளோபல் சிவாகம அக்கடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தமை இலங்கை வாழ் அனைத்து இந்து, சைவ ,மக்களுக்கும், இலங்கை மற்றும் அனைத்துலக சிவாச்சாரியார்களுக்கும் கிடைத்த பெருமையாகும்
இந்த விருது வழங்கும் வைபவம் சிவபுரம் குளோபல் சிவாகம அக்கடமி சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றாலும், கனடாவில் இந்த சிறப்பு விருது வழங்கும் வைபவத்தை தனது ரொறன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடத்தினார். அன்றைய தினம் சிவாகம கலாநிதி, சிவஶ்ரீ நா.சோமாஸ்கந்த சிவாச்சாரியார் (சுன்னாகம்) அவர்களுக்கு ஆலயத்தின் அனைத்து சிவாச்சாரியப் பெருமக்களும் கூடி நிற்க,வரசித்தி வேதாகம் பயிலும் இளம் மாணவர்கள் வேதபராயணத்தை உச்சரிக்க உயர்ந்து கௌவரம் வழங்கப்பெற்றது.
இங்கு காணப்படும் படங்கள் அன்றைய தினம் எடுக்கப்பெற்றவையாகும்.
(செய்தி:- சத்தியன்- படங்கள் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானம்)