இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவருமான திருமதி. மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.என அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரி பதவிக்கு மேலாக பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார் என்பதும் 15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார் என்பதும் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இவர் இந்த நியமனத்தைப் பெறுவதற்கு முன்னர் பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார்.