சில வாரங்களுக்கு முன்னரம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்திலிருந்து சுமார் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைக்கு அருகில் உள்ள சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் சுமார் 30 அடி திமிங்கிலம் நேற்று செவ்வாய்கிழமையன்று கரை ஒதுங்கியதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி சுருவில் கடற்கரையிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்றுக் காலை கரைக்கு திரும்பும் போது இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்குவதை அவதானித்த உடனே கிராம சேவையாளருக்கு அறிவித்ததாகவும் பின்னர் அவர் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த பாரிய திமிங்கிலம் இறந்தபடி கரையொதுங்கியதும் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்புக் கடலில் இரசாயனப் பதார்த்தங்கள் நிறைந்த பெரியதொரு கப்பல் தீப்பற்நி முற்றாக எரிந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று சந்தேகிக்கும் வகையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தில் இரசாயப் படிவுகள் எதுவும் இல்லையா என்பது பரிசோதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு இரசாயன பதார்த்தங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பல் முற்றாக மூழ்கியதைத் தொடர்ந்து இவ்வாறு நாட்டின் நான்கு கரையோரங்களிலும் உயிரினங்கள் பல இடங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது குறிப்பிடத்தக்கது.