மாற்றம் ஒன்றுதான் மாறாதது மரணம் ஒன்றுதான் நிலையானது இறப்பு என்பது எல்லோருக்கும் உள்ளது என்ற உண்மை எவருக்கும் தெரிந்தது மலையென நிமிர்ந்து நின்ற மனித நேயன் வசந்த குமார் மறைந்தனன் என்ற சேதி இடியென எம்செவியில் விழுந்த போது இடிந்துதான் போனோம் உண்மை கடிதென வந்த காலன் கவர்ந்தனன் சிறந்த கல்விமான் எங்கள் வசந்த குமாரை
தோன்றின் புகழொடு தோன்றுக_ அகிதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
கல்விவளமும் கலைவளமும் கலந்துரையும் கவினுறு ஊராம் உடுப்பிட்டியில் வந்துதித்த வசந்தகுமார் “இளமையிற் கல் சிலையில் எழுத்தாய் ” சிறுவயது முதல் கல்வியில் சிறந்து விளங்கி தான் கல்வி கற்ற உடுப்பிட்டி அமரிக்க மிஷன் கல்லூரிக்கு பெருமை சேர்த்ததுடன் தன்னையும் கற்றவர் மத்தியில் கலங்கரை விளக்காய் நிலை நிறுத்தினார் பேச்சுப்போட்டிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்த கலாநிதி வசந்தகுமார்
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
தான் பெற்ற கல்வியறிவை கொண்டு தன் மொழிக்கும் தன் இனத்திற்கும் ஈடிணையற்ற பணியாற்றி
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கும்
கற்றனைத் தூறும் அறிவு ” ஒரு ஊரின் நடுவில் இருக்கும் நன்னீரி கேணியில் எப்படி மக்கள் அனைவரும் சென்று பயனடைவார்களோ அவ்வாறே தான் கற்ற கல்வியினால் ஈழத்திலும் புலத்திலும் அளவிட முடியாத
அரும் பணிகளை ஆற்றியவர் கலாநிதி வசந்தகுமார் என்றால் மிகையல்ல .கனடாவில் காலடி பதித்த நாள் முதல் கணணி அறிவை அனைவரும் பெறவேண்டும் என்ற பெருவிருப்போடு அவரால் உருவாக்கப்படதுதான் கம்பியூற்ற ரெக் (Computek College) என்ற கல்வி நிறுவனம் அதுவுமன்றி SACEM என்ற அமைப்பினை உருவாக்கி அதனூடாக பல்வேறு நற்பணிகளை ஆற்றியவர் கலாநிதி வசந்தகுமார்
கனேடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தில் (CTCC) இணைந்து அதன் வளர்ச்சிக்காக தன்னலமற்ற
தொண்டாற்றியவர் நான் சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட காலம் முதல் என் கனவுகளை
நனவாக்க தோளோடு தோள் நின்ற நல்ல நண்பன். எமது சம்மேளனம் சில இறுக்கமான மிகக் கடினமான காலப்பகுதிகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட சமயங்களில்
” உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு ” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப என் துயர் துடைக்க துணிச்சலோடு பணியாற்றியவர் மேலும் என் நீண்ட காலக் கனவான எங்கள் சம்மேளனத்திற்கு
என்று ஒரு நிரந்தர கட்டிடம் வாங்கவேண்டும் என்ற கனவை நனவாக்க ஒரு தொகை பணத்தை முதலீடு செய்ததோடு நிற்காமல் அதற்கான ஆலோசனைகலாகட்டும் செயற்பாடுகளாகட்டும் அவருக்கு நிகர் அவரேதான் இன்று நாம் எங்கள் இலக்கை அடைந்து விட்டோம் மிக விரைவில் எமது புதிய கட்டிட
திறப்புவிழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கின்ற இந்த வேளையில் கலாநிதி வசந்தகுமார்
எங்களோடு இல்லை என்பது ஏற்கமுடியாத ஒன்றாகும் ஆனாலும் அவர் அன்றைய தினம் தோன்றாத் துணையாய் எங்களோடு துணை நிற்பார் என்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் உண்டு கலாநிதி
வசந்தகுமாரின் நாமம் வீசும் காற்றும் வீழுகின்ற மழைத்துளியும் வாழுகின்ற காலம் வரை வாழும் நம்மோடு அவரது ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கிறேன்
அன்னாருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்
இங்ஙனம்
சாந்தா பஞ்சலிங்கம்
தலைவர்- கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம்
Please join us for a Tribute for Dr. Tham Vasanthakumar on June 19, 2021 at 5:00 PM Eastern Time (US and Canada) by Zoom.
Zoom Meeting ID: 925 3998 1440
Passcode: 967207
Friends and Family are welcome to attend. After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.
For more information, please contact Santha at 416-200-5470.