தாக்கம் அதிகம் உள்ள டெல்றா கிருமி தொற்று தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் இரண்டாவது முறை தடுப்பூசியை துரிதப்படுத்த ஒன்றாரியோ அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்
COVID-19 இன் அடுத்த படியாக தோன்றியுள்ள தொற்றான டெல்றா கிருமியின் தாக்கம் அதிகமாக உள்ள மேலும் மூன்று பிரதேசங்களை ஒன்றாரியோ முதல்வர் அறிவித்துள்ளார். – ஹாமில்டன், டுர்ஹாம் மற்றும் சிம்கோ – முஸ்கோகா – ஒன்ராறியோ ஆகியவையே இந்த பிரதேசங்களாகும். அங்கு இரண்டாவது முறை பெறக் கூடிய மக்கள் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு தற்போது தடுப்பூசிகள் மேற்படி பிரதேசங்களில் அதிகளவு வைத்துக்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது இவ்வாறிருக்;க, ரொறன்ரோ மற்றும் பீல் போன்ற பகுதிகளில் முன்னர் அதிக தாக்கம் நிறைந்த டெல்றா கிருமி பீடித்த மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன
“டெல்றா கிருமியின் அதிக பாதிப்பு உள்ள 10 பொது சுகாதார பிரிவுகள் மூலம், பொது சுகாதார பிரிவுகளுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உறுதி செய்வதற்கான எங்கள் வளங்களையும் முயற்சிகளையும் நாங்கள் பயன்படுத்த தயாராக உள்ளோம் என்று முதல்வர் டக்போர்ட் அறிவித்துள்ளார்,”
இந்நிலையில் ஒன்றாரியோ மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் அதிக தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஒப்புக் கொண்டார், “மேலும் எமது அரசாங்கம் சுகாதார பிரிவுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. மக்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை, அதனால் அவர்கள் திரும்பி வந்து பல முறை அலைய வேண்டியதில்லை” என்று உறுதி செய்தார் அமைச்சர்