(மன்னார் நிருபர்)
(20-06-2021)
மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் நேற்று சனிக்கிழமை (19) மாலை ‘மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்’ அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-கொரோனா தொற்று காரணமாக அமுல் படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக பாதீக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்,மற்றும் பாதீக்கப்பட்ட குடும்பங்கள் என 150 குடும்பங்கள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-மருதமடு,அந்தோனியார் புரம்,தேவன் பிட்டி,மூன்றாம் பிட்டி,பரப்பாங்கண்டல்,சாந்தி புரம், செல்வநகர் ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது.
‘மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்’ அமைப்பின் பிரதி நிதிகளான பி.வி.டக்ஸன், அன்ரனி டேவிட்சன், மதன், லக்ஸன், பிரேம் குமார் ஆகியோர் இணைந்து நேரடியாக சென்று வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.