இந்த புதிய டெல்றா கிருமியானது ஒரு கவலையளிக்கும் ஒரு விடயமாகும் என்று தெரிவித்துள்ள கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி தெரேசா டாம், ஏனெனில் ஒரு தடவை வழங்கப்பெறும் முதலாவது தடுப்பூசி இந்த புதிய டெல்றா கிருமிக்கு எதிராக செயற்படும் பயனுள்ளதாக இல்லை, இதனால், இது கனடாவில் மக்கள் இரண்டாவது தடவை பெற்றுக்கொள்ள வேண்டிய தடுப்பூசியின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.என்றும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
இந்த வாரத்தில் கனடாவில் கோவிட் தொற்றான புதிதாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் டெல்டா கிருமியினால் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தாக்கத்தின் எண்ணிக்கை 66 சதவீதம் உயர்ந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம இந்த அதிகரிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் அதிகரிப்பு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் , பொது சுகாதார தலைமை அலுவலகம் ஊடகங்களுக்கு வழங்கிய விபரங்களின் படி 1,187 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்ப்pடத்தக்கதாகும்.
“புதிதான டெல்டா நோய்த் தொற்றுக் கிருமி;யானது இப்போது அனைத்து மாகாணங்களிலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனது தாக்கத்தை செலுத்து ஆரம்பித்துள்ளது” என்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
“நிச்சயமாக, புதிய டெல்றா கிருமி தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பற்றிய எனது எச்சரிக்கையும், முடிந்தவரை அதிகமானவர்களுக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசிகளைப் பெற வேண்டிய அவசியமும் உள்ளது.”
இந்த புதிய டெல்றா கிருமியானது முதன்முதலில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது, ஆனால் இப்போது இங்கிலாந்திலும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்துகிறது, அங்கு அது வேகமாக பரவி வருகிறது, பெரும்பாலும் அறியப்படாத மக்கள் மத்தியில் அந்த கிருமி; தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது.
இங்கிலாந்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா கிருமியை விட இது குறைந்தது 1.5 மடங்கு பலமுள்ள தொற்றுநோய்க்கிருமியாக இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் தற்போதைய நிலையில் இந்த புதிய டெல்றா நோய்க்கிருமியானது , கனடாவில் 216,000 க்கும் மேற்பட்டாருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில், உறுதிப்படுத்தப்பட்ட புதிய டெல்றா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 80 சதவீதம் அதிகரித்து 76,000 ஆக உயர்ந்துள்ளது என்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதற்கான திட்டங்களை மேலும் தாமதப்படுத்த வேண்டியிருந்தது, இறுதியில் இந்தக் கட்டுப்பாடுகளை குறைந்தது ஒரு மாதமாவது மேலும் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.
கனடா பயன்படுத்தும் இரண்டு அளவு தடுப்பூசிகள் டெல்டாவுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் ஒரு டோஸ் கூட கடுமையான நோயைத் தடுப்பதில் சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களும் டெல்டாவின் இருப்புக்கு எதிராக எச்சரிக்கை செய்கின்றன. இது ஒரு இயக்கி என்று நம்பப்படுகிறது.